சதி திட்டம் தீட்டப்பட்ட அல்-பலாஹ் பல்கலை மாணவர் விடுதியின் 13-வது அறை எண்!

சதி திட்டம் தீட்ட, அல்-பலாஹ் பல்கலை மாணவர் விடுதியின் 13-வது அறை எண் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அல் - பலாஹ் பல்கலை
அல் - பலாஹ் பல்கலைANI
Published on
Updated on
1 min read

ஒரு வழக்கமான, பழைய, அழுக்கடைந்த மாணவர் விடுதியின் 17வது கட்டடத்தில் உள்ள 13ஆம் அறை எண் தற்போது, புலனாய்வு அதிகாரிகளின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தில்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் சதித் திட்டங்களைத் தீட்ட வெள்ளை கோட் மாடல் பயங்கரவாத அமைப்பினர் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த அறைதான், மருத்துவர்களாக இருந்துகொண்டு, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் ரகசிய சந்திப்புகளை மேற்கொண்டுள்ளனர். அதில் சிலர் இதுவரை கைது செய்யப்பட்டுவிட்டனர்.

கடந்த வாரம், அல் - பலாஹ் பல்கலை மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களது தங்குமிடத்திலிருந்து வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த பல்கலை பேசுபொருளாகியிருந்தது.

ஆனால், எதிர்பாராத வகையில், தில்லி செங்கோட்டையில் நவ. 10ஆம் தேதி நடந்த கார் குண்டு தாக்குதலில் பலர் பலியான நிலையில், அந்தக் காரை ஓட்டி வந்ததும் அல் - பலாஹ் பல்கலை மருத்தவர் உமர் நபி என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதே மருத்துவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷாஹீன் ஷாஹித், இந்தியாவில், பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விடுதி அறை 13வது எண் டாக்டர் முஸாமில் பயன்படுத்தி வந்துள்ளார். இவர் காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்தவர். இந்த அறையில்தான், பயங்கரவாத சதித் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 6ஆம் தேதியும் பயங்கரவாத சதிச் செயலை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் நடைபெற்று வரும் விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த அறையிலிருந்து மின்னணு சாதனங்கள், பென் டிரைவ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு, தற்போது பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து சில ரசாயனப் பொருள்களும் கைப்பற்றப்பட்டதாகவும், இங்கு வெடிகுண்டுகள் தயாரிக்க ரசாயனங்களை கலந்து பார்த்து சோதனை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com