2 ஆண்டுகளில் 2,000 நக்சல்கள் சரண்: சத்தீஸ்கர் முதல்வர் தகவல்!

சத்தீஸ்கரில் 2 ஆண்டுகளில் 2,000 நக்சல்கள் சரணடைந்துள்ளது குறித்து...
சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் (கோப்புப் படம்)
சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் (கோப்புப் படம்)ENS
Published on
Updated on
1 min read

சத்தீஸ்கரில், கடந்த 2 ஆண்டுகளில் 2,000-க்கும் அதிகமான நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளதாக, சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்துள்ளார்.

ஜகதல்பூர் மாவட்டத்தில், மறைந்த பழங்குடியின தலைவரான பிர்சா முண்டாவின் 150 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் இன்று (நவ. 15) கலந்து கொண்டார்.

அப்போது, பேசிய அவர், கடந்த 2 ஆண்டுகளில் 2,000-க்கும் அதிகமான நக்சல்கள் சரணடைந்துள்ளதாகவும், அதற்கு சத்தீஸ்கர் அரசின் நக்சல்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்கள்தான் முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் பேசியதாவது:

“நக்சல் இயக்கம் அதன் இறுதி மூச்சை எட்டியுள்ளது. தொடர்ந்து, அதிகளவிலான நக்சல்கள் சரணடைந்து வருகின்றனர். சரணடையும் நக்சல்களுக்கு நாம் சிறப்பான மறுவாழ்வுத் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். கடந்த 2023 ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான அரசு அமைந்தது முதல் சத்தீஸ்கரில் 2,000-க்கும் அதிகமான நக்சல்கள் சரணடைந்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

இத்துடன், வரும் 2026 மார்ச் 31 ஆம் தேதிக்குள் நாட்டில் உள்ள நக்சல்கள் அழிக்கப்படுவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உறுதியளித்துள்ளதாக, முதல்வர் விஷ்ணு தியோ சாய் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: பிகாரில் நடந்த வாக்குத்திருட்டை விரைவில் அம்பலப்படுத்துவோம்: கே.சி. வேணுகோபால்

Summary

Chhattisgarh CM Sai has said that more than 2,000 Naxals have surrendered to security forces in the last 2 years.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com