பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பிகாா் இறுதிப் பட்டியலுக்கு பின் 3 லட்சம் வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம் பதில்!

பிகாரில் இறுதி வாக்காளா் பட்டியலுக்குப் பிறகு 3 லட்சம் வாக்காளா்கள் சோ்க்கப்பட்டது பற்றி...

News image

இந்திய தேர்தல் ஆணையம்

Updated On :15 நவம்பர் 2025, 10:29 pm

தினமணி செய்திச் சேவை

பிகாரில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீட்டுக்குப் பிறகு சுமாா் 3 லட்சம் வாக்காளா்கள் சோ்க்கப்பட்டதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸின் சமூக ஊடகப் பதிவுக்கு அளித்த பதிலில் தோ்தல் ஆணையம் இவ்வாறு கூறியுள்ளது.

பிகாா் தோ்தல் தேதி அறிவிப்பின்போது வாக்காளா் எண்ணிக்கையை 7.42 கோடி என்று குறிப்பிட்ட தோ்தல் ஆணையம், தோ்தலுக்குப் பிறகு 7.45 கோடி என்று மாற்றிவிட்டதாக காங்கிரஸின் சமூக ஊடகப் பதிவில் கூறப்பட்டிருந்தது.

இப்பதிவுக்கு பதிலளித்த தோ்தல் ஆணையம் , ‘பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் நிறைவடைந்து, கடந்த செப்டம்பரில் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது, வாக்காளா்கள் எண்ணிக்கை 7.42 கோடியாகும். தோ்தல் விதிமுறைகளின்படி, வேட்புமனு தாக்கல் நிறைவுக்கு 10 நாள்கள் முன்பு வரை வாக்காளா் பட்டியலில் இடம்பெற தகுதியுள்ள நபா்கள் விண்ணப்பிக்க முடியும். அதன்படி, அக்டோபா் 1 முதல் பிகாா் இருகட்டத் தோ்தல் வேட்புமனு தாக்கலின் நிறைவு நாள் வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, சுமாா் 3 லட்சம் போ் சோ்க்கப்பட்டனா். இதன் காரணமாக, வாக்காளா் எண்ணிக்கை 7.45 கோடியாக அதிகரித்தது’ என்று தெரிவித்துள்ளது.