இந்தியாவுக்கு 30,000 விமானிகள் தேவை: மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தகவல்!

இந்தியாவுக்கு கூடுதலாக 30,000 விமானிகள் தேவைப்படுவார்கள் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்...
மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு
மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு (கோப்புப் படம்) எக்ஸ்
Published on
Updated on
1 min read

இந்திய விமான நிறுவனங்களின் புதிய விமானங்களை இயக்குவதற்கு கூடுதலாக 30,000 விமானிகள் தேவைப்படுவார்கள் என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

இந்திய விமான நிறுவனங்கள் சுமார் 17,000 புதிய விமானங்களை ஏர்பஸ் மற்றும் போயிங் போன்ற நிறுவனங்களிடம் இருந்து வாங்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கூறிய மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, அந்த விமானங்களை இயக்குவதற்கு கூடுதலாக 30,000 விமானிகள் தேவைப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் பேசியதாவது:

“தற்போது இந்தியாவில் 834 விமானக்குழுக்களில் 8,000 விமானிகள் இருக்கின்றனர். ஒரு விமானத்தை அட்டவணையின்படி இயக்குவதற்கு 10 முதல் 15 விமானிகள் தேவை. அதன்படி, புதியதாக வாங்கப்படும் 1,700 விமானங்களுக்கு கூடுதலாக 25,000 முதல் 30,000 விமானிகள் தேவைப்படுவார்கள்.

எனவே, விமானிகள் பற்றாக்குறையை சரிசெய்ய நாட்டில் அதிகமான விமானி பயிற்சி அமைப்புகள் இருக்கவேண்டும். இதுவரை, இருப்பவை மூலம் குறிப்பிட்ட அளவில் மட்டுமே விமானிகள் உருவாக்கப்படுகிறார்கள். இந்திய விமானப் பிரிவில் உருவாகும் ஒரு வேலை வாய்ப்பானது மேலும் 15 வேலை வாய்ப்புகளை உருவாக்கக் கூடும் ” எனத் தெரிவித்துள்ளார்.

இத்துடன், நாட்டில் நாள்தோறும் சுமார் 4.8 லட்சம் மக்கள் விமானப் போக்குவரத்தின் மூலம் பயணிப்பதாகவும், கடந்த நவ.10 ஆம் தேதி அன்று மட்டும் 5.3 லட்சம் மக்கள் விமானங்கள் மூலம் பயணம் செய்திருப்பது புதிய சாதனை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: எஸ்ஐஆரால் கடும் பணிச்சுமை: மே.வங்கத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!

Summary

Union Aviation Minister Ram Mohan Naidu has said that Indian airlines will need an additional 30,000 pilots to operate the upcoming new aircraft.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com