

பிகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் கீழ் மீண்டும் காட்டாட்சி என்ற அச்சத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் வாக்களித்ததாக ஜன் சுராஜ் கட்சித் தலைவர் கூறினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜன் சுராஜ் கட்சியின் தேசியத் தலைவர் உதய் சிங் கூறுகையில்,
பிகார் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்ற நவ.11 வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பு தில்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டு வெடிப்புக்குப் பின்னர் சீமாஞ்சல் பகுதியில் துருவமுனைப்பு ஏற்பட்டதாக அவர் கூறினார்.
ஆர்ஜேடியின் கீழ் காட்டாட்சி மீண்டும் வரும் என்ற அச்சத்தில் மக்கள் இருந்தனர். ஆனால் ஜன் சுராஜ் கட்சிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கக்கூடிய பலர், பயத்தில் என்டிஏ-க்கு வாக்களித்தனர் என்று அவர் கூறினார்.
மக்களுக்கு காங்கிரஸ் அல்லது எதிர்க்கட்சியான மகாகத்பந்தனுடன் அல்ல, ஆர்ஜேடியுடன் பிரச்னை இருந்தது என்றார்.
தில்லி குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்ததற்கு மற்றொரு காரணியும் செயல்பட்டது. இந்த சம்பவம் வாக்குகள் துருவப்படுத்தலுக்கு வழிவகுத்தது என்று அவர் கூறினார்.
இஸ்லாமிய சகோதரர்கள் எங்கள் மீது போதுமான நம்பிக்கை வைக்கவில்லை. நாங்க அவர்களைத் தொடர்புகொண்ட போதிலும் இவ்வாறு நடந்தது. ஆனால் அவர்கள் நீண்ட காலத்திற்கு எங்களை ஆதரிப்பார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளால் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம். ஆனால் வருத்தப்படவில்லை. ஒரு இடத்தைக் கூட நாங்கள் வெல்லவில்லை என்றாலும், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை தொடர்ந்து எதிர்ப்போம்.
தேர்தல் அறிவிக்கப்படும் வரை, நிதிஷ் குமார் அரசு பொதுப் பணத்தின் மூலம் மக்களின் வாக்குகளை வாங்க ரூ. 40,000 கோடியை செலவிட்டுள்ளார். இது முன்னெப்போதும் இல்லாதது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க: நவ.16,17ல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.