

குஜராத்தின் பழங்குடி சமூகத்தின் தெய்வமான பண்டோரி மாதா கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்தார்.
ஒரு நாள் பயணமாக குஜராத் வந்துள்ள பிரதமர் மோடி இன்று காலை சூரத் விமான நிலையத்தில் தரையிறங்கினார். மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதையின் முன்னேற்றத்தை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
அதன்பின்னர், நர்மதா மாவட்டத்தில் உள்ள தேடியாபாதா நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 23 கி.மீ தொலைவில் உள்ள சக்பரா தாலுகாவில் உள்ள நர்மதா மாவட்டத்தின் தேவ்மோக்ரா கிராமத்தை அடைந்தார். அங்கு பழங்குடியினர் சமூகத்தின் தெய்வமான பண்டோரி மாதா கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்தார்.
பின்னர் பழங்குடி சின்னமான பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளைக் குறிக்கும் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக தேடியாபாதாவுக்குச் செல்கிறார்.
இந்த நிகழ்வில், அங்கு நடைபெறும் நிகழ்ச்சியின்போது, பழங்குடி சமூகங்களை மேம்படுத்துவதையும், கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பல மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுவார்.
மேலும், பழங்குடிப் பகுதிகளில் இணைப்பை மேம்படுத்த குஜராத்தின் 14 பழங்குடி மாவட்டங்களுக்கு 250 பேருந்துகளை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இதையும் படிக்க: லாலுவின் மகள் அரசியலில் இருந்து விலகல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.