

தலைநகர் தில்லியில் இளம்பெண்ணை காதலன் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியின் பஞ்சாபி பாக் பழைய குடிசைப் பகுதியில் உள்ள வீட்டில் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் கிடப்பதாக சனிக்கிழமை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் நிகழ்விடத்துக்கு விரைந்தனர்.
அப்போது முஸ்கன் என்ற பெண் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் மெத்தையில் கிடந்ததாகக் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மற்றொரு அறையில், நீரஜ்(25) என அடையாளம் காணப்பட்ட இளைஞர் மார்பில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் காணப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
காதல் விவகாரத்தில் இச்சம்பவம் அரங்கேறியிருக்கலாம் என்று அதிகாரி கூறினார். துப்பாக்கிச் சூட்டுக்கான சரியான காரணம் கண்டறியப்பட்டு வருவதாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.
தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.