

உத்தரப் பிரதேசத்தில் கல் குவாரியின் இடிபாடுகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தொழிலாளி ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் கல் குவாரியில் பாறைகள் சரிந்ததில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கினர். நிகழ்விடத்தில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கல் குவாரியின் இடிபாடுகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை தொழிலாளி ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.
அதே நேரத்தில் பலர் சிக்கியிருப்பதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சம்பவ இடத்தைப் பார்வையிட்ட அமைச்சரும் உள்ளூர் எம்எல்ஏவுமான சஞ்சீவ் குமார், சுமார் ஒரு டஜன் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு அடியில் இருக்கலாம் என்று கூறினார். சிக்கிக் கொண்டிருந்தவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை.
சுரங்க விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். வாரணாசி மண்டலத்தின் கூடுதல் காவல்துறை இயக்குநர் பியூஷ் மோர்தியா ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், இடிபாடுகளை அகற்றும் பணி நேற்று இரவு முதல் நடந்து வருகிறது.
ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது, மற்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. பலியானவர் பனாரி கிராமத்தைச் சேர்ந்த ராஜு சிங் (30) என போலீஸ் அடையாளம் கண்டுள்ளது. மலையிலிருந்து விழுந்த கற்கள் மிகப் பெரியவை என்றும், கவனமாக வேலை செய்ய வேண்டியிருப்பதால் மீட்புப் பணிகள் நேரம் எடுக்கும்.
முழு நிர்வாகமும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.