

என் சகோதரியை இழிவுபடுத்தியதை ஏற்க முடியாது என லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் தெரிவித்துள்ளார்.
என் குடும்பத்தில் எனக்கு நடந்ததைக் கூட பொறுத்துக்கொள்வேன், ஆனால், என் சகோதரிக்கு நடந்ததை எந்தவொரு சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிகார் பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தோல்வியடைந்த நிலையில் கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோஹிணி ஆச்சார்யா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தேஜஸ்வியின் அண்ணன் தேஜ் பிரதாப் யாதவும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்திலிருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கியிருக்கும் நிலையில், சகோதரியும் அரசியலில் இருந்து விலகியுள்ளார்.
இதனிடையே குடும்பத்திலிருந்து விலகிச்செல்ல கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், அவதூறு சொற்களைப் பேசியதுடன் செருப்பை கழற்றி அடிக்கவும் முயன்றதாக ரோஹிணி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கட்சியிலிருந்து விலகுவதாகவும் குடும்பத்திலிருந்து பிரிந்து செல்வதாகவும் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேஜ் பிரதாப் யாதவ்,
''என் குடும்பத்தால் எனக்கு நடந்ததை பொறுத்துக்கொள்வேன். ஆனால், எந்தவொரு சூழலிலும் என் சகோதரிக்கு நடந்ததை எந்த வகையிலும் ஏற்க முடியாது. என் சகோதரியின் முடிவு என்னை நிலைகுலையச் செய்துள்ளது. என் குடும்பத்தின் மீது அவதூறு பேசுபவர்களை பிகார் மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.
என் சகோதரியை நோக்கி செருப்பைக் காட்டியதாக செய்திகளில் அறிந்ததும் எனக்குள் இருந்த வலி மிகுந்த ஆவேசமாக மாறியது. பொதுமக்களின் உணர்வுகளை மதிக்காமல் துன்புறுத்தும்போது, அறிவு மங்கிவிடுகிறது. அருகில் இருக்கும் சிலரால் தேஜஸ்வியின் அறிவும் மங்கியுள்ளது. இதனால் விளையும் மோசமான விளைவுகளை கடுமையாக எச்சரிக்கிறேன். குடும்பத்தின் மரியாதையைக் காக்கும் வகையில் ரோஹிணியை என் தந்தை அனுமதிக்க வேண்டும்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | தந்தைக்கு சிறுநீரகம் கொடுத்தது தவறா? லாலு பிரசாத் மகள் ரோஹிணி உருக்கம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.