

யுனிசெஃபின் குழந்தைகள் நலனுக்கான தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் முன்னணி நடிகையாக இருந்துவரும் கீர்த்தி சுரேஷ், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நலனுக்கான தூதராக (UNICEF) நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த பதிவில் கீர்த்தி சுரேஷ், ``குழந்தைகள்தான் நமது மிகப்பெரிய பொறுப்பு மற்றும் நம்பிக்கை. இந்தியாவில் குழந்தைகளுக்கான யுனிசெஃப் தூதராக இணைவதில் பெருமை கொள்கிறேன். ஆரோக்கியமாக வளரவும், கற்றுக் கொள்ளவும், கனவு காணவும் ஒவ்வொரு குழந்தைக்கும் தகுதியுண்டு.
இதனை நனவாக்கவே கடந்த 76 ஆண்டுகளாக யுனிசெஃப் உழைத்து வருகிறது. இந்தப் பணியில் ஒரு பகுதியாக நானும் இணைவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இக்குழுவில் ஏற்கெனவே அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், பிரியங்கா சோப்ரா, ஆயுஷ்மண் குர் ரானா, கரீனா கபூர் ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷும் இணைந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.