பிகாரில் எதிர்பார்த்ததைவிட சிறப்பான வெற்றி! -நிதீஷ் குமாரின் மகன்

முதல்வர் நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் பேட்டி...
நிதீஷ் குமார்
நிதீஷ் குமார்படம் | ஏஎன்ஐ
Published on
Updated on
1 min read

பிகாரில் எதிர்பார்த்ததைவிட சிறப்பான வெற்றி பெற்றிருப்பதாக அம்மாநில முதல்வர் நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் தெரிவித்துள்ளார்.

243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் பேரவைக்கு நடைபெற்ற தோ்தல் முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், அதில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளைக் கைப்பற்றி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார்
நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார்

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து இன்று(நவ. 16) அவர் பேசியிருப்பதாவது: “தேர்தலில் தீர்க்கமாக வெற்றியைப் பதிவு செய்வோம் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். ஆனால், இறுதி முடிவு எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்துவிட்டது. இதற்காக பிகார் மக்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறேன்.

அப்பாவின் கடந்தகால சாதனைகளைப் பார்த்தும், பிகாரை புதிய உயரத்துக்கு இட்டுச் செல்லும் அவருடைய தொலைநோக்கு கனவைப் பார்த்தும் மக்கள், எங்களுக்கு மகத்தான பெரும்பான்மையுடன் வெற்றியை அளித்துள்ளனர்” என்றார்.

Summary

NDA's landslide victory in Bihar better than expected: Nitish Kumar's son

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com