

இந்தியாவில் அடைக்கலமாயிருக்கும் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு வங்கதேசம் கடிதம் அனுப்பியுள்ளது.
வங்கதேசத்தில் மக்களைக் கொலை செய்ய உத்தரவிட்டதாகக் கூறி, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதனிடையே, ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பதால் அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு வங்கதேசம் முறையாக கடிதம் அனுப்பி கோரியுள்ளது.
கடிதத்தில் வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்ததாவது, ``இரு நாடுகளுக்கிடையேயான ஒப்படைப்பு ஒப்பந்தத்தின்கீழ், தப்பியோடிய குற்றவாளிகளை திருப்பி அனுப்பும் கடமை இந்தியாவுக்கு உள்ளது.
மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக தண்டனை பெற்ற ஷேக் ஹசீனா மற்றும் அசாதுஸ்மான் கான் கமல் ஆகிய இரு குற்றவாளிகளுக்கும் எந்தவொரு நாட்டாலும் அடைக்கலம் வழங்குவது நீதிக்கு அவமரியாதையாகவும், நட்பற்ற செயலாகவும் கருதப்படும்.
ஆகையால், அவர்களை உடனடியாக நாடுகடத்தவும், வங்கதேச அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: மரண தண்டனை: தீர்ப்பு ஒருதலைபட்சமானது; அரசியல் நோக்கம் கொண்டது! - ஷேக் ஹசீனா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.