கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Published on
Updated on
1 min read

நமது நிருபர்

தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி.ராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் ஏற்கெனவே நிலுவையில் உள்ள பிற மனுக்களோடு சேர்த்து இந்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என்று தெரிவித்தது.

கொடிக் கம்பங்கள் விவகாரத்தில் டி.ராஜா கடந்த செப்டம்பர் 17}ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: கொடிக் கம்பங்களை அகற்ற கடந்த ஆண்டு நவம்பர் 29}இல் தமிழக நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவின் பொறியாளர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், மதுரை பழங்காநத்தம், ஜெயம் தியேட்டருக்கு எதிரே, பைபாஸ் சாலை, பேருந்து நிறுத்தம், வார்டு எண்.74}இல் அதிமுக கொடிக் கம்பத்தை நிறுவ அனுமதி வழங்குமாறு உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் கடந்த ஜனவரி 27}ஆம் தேதி தள்ளுபடி செய்யபப்ட்டன. மேலும், பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடர்பான நோட்டீûஸ அந்தந்த மாவட்டங்களில் உள்ள கட்சிகளுக்கு நெடுஞ்சாலைத் துறை அனுப்பியது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அதன் டிவிஷன் அமர்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பு சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவை கடந்த மார்ச் 6}ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன.

அதேவேளை, மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பங்களை அதிகாரிகள் அகற்றுவதை நிறுத்த உத்தரவிடக் கோரி அக்கட்சி தாக்கல் செய்த ரிட் மனுவை தனி நீதிபதி கடந்த ஜூன் 20}ஆம் தேதி தள்ளுபடி செய்தார். அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் டிவிஷன் அமர்வு முழு அமர்வுக்கு மாற்றியது.

இதற்கிடையே, டிவிஷன் அமர்வு 6.3.2025 அன்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அமாவாசி தேவர் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு கடந்த ஆகஸ்ட் 8}ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் டிவிஷன் அமர்வு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மனுவை கடந்த ஆகஸ்ட் 13}ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதையடுத்து டி.ராஜா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் என மனுவிஸ் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com