குடும்பச் சண்டை.. மௌனம் கலைத்த லாலு பிரசாத்!

குடும்பச் சண்டை குறித்து முதல் முறையாக மௌனம் கலைத்தார் லாலு பிரசாத்.
லாலு பிரசாத் யாதவ்
லாலு பிரசாத் யாதவ்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

பாட்னா: குடும்ப பிரச்னையை வீட்டுக்குள் நான் தீர்த்துவிடுவேன், அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம், கட்சியை எவ்வாறு பலப்படுத்துவது என்பது குறித்து சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர்களுக்கு லாலு பிரசாத் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாட்னாவில் உள்ள தன்னுடைய இல்லத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிகார் தேர்தலில் போட்டியிட்டவர்களை நேரில் அழைத்துப் பேசியிருக்கிறார் லாலு பிரசாத்.

இந்தக் கூட்டத்தில், லாலு யாதவ், மனைவி ராஃப்ரி தேவி மற்றும் மூத்த மகள் மிசா பாரதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அப்போது பேசிய லாலு, குடும்பத்துக்குள் என்ன நடந்தாலும், எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதனை நானே வீட்டுக்குள் முடித்துக் கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பிகார் தேர்தல் முடிவுகளில், கட்சியின் மோசமான தோல்விக்கும், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த தொகுதிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை, லாலு வீட்டிலிருந்து வெளியேறிய அவரது மகள் ரோஹிணி, தன்னுடைய சகோதரர் தேஜஸ்வி மற்றும் அவரது உதவியாளர்கள் தன்னை அவமரியாதை செய்ததாகவும் தாக்க முயன்றதாகவும் கூற்றம்சாட்டியிருந்தார்.

பிகார் தேர்தல் தோல்விக்கு யாா் பொறுப்பு என்ற வாக்குவாதத்தின்போது, தன்னை அவமானப்படுத்தி வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டதாக இளைய மகன் தேஜஸ்வி யாதவ் மீது இண்டாவது மகள் ரோஹிணி ஆச்சாா்யா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com