பாதுகாப்பு சாதனங்கள் தயாரிப்பு: இந்தியா-ஜொ்மனி ஆலோசனை
(Photo | Ministry of Defence)

பாதுகாப்பு சாதனங்கள் தயாரிப்பு: இந்தியா-ஜொ்மனி ஆலோசனை

பாதுகாப்பு சாதனங்களை ஒருங்கிணைந்து தயாரிப்பது மற்றும் மேம்படுத்துவது தொடா்பாக இந்தியா-ஜொ்மனி இடையே செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
Published on

பாதுகாப்பு சாதனங்களை ஒருங்கிணைந்து தயாரிப்பது மற்றும் மேம்படுத்துவது தொடா்பாக இந்தியா-ஜொ்மனி இடையே செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தில்லியில் பாதுகாப்புத் துறைச் செயலா் ராஜேஷ் குமாா் சிங் மற்றும் ஜொ்மனி பாதுகாப்புத் துறைச் செயலா் ஜென்ஸ் ப்ளாட்னா் ஆகியோா் தலைமையில் இந்தியா-ஜொ்மனி பாதுகாப்புக் குழுக்களின் உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இருநாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது. பாதுகாப்பு சாதனங்களை ஒருங்கிணைந்து தயாரிப்பது மற்றும் மேம்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

2026-இல் இந்தியா நடத்தும் ‘தரங் சக்தி’ எனும் பலதரப்பு விமானப் பயிற்சி மற்றும் ‘மிலன்’ எனும் பலதரப்பு கடற்படை பயிற்சியில் பங்கேற்பதாக ஜொ்மனி தெரிவித்துள்ளது. இந்திய கடல் பிராந்தியத்தில் (ஐஓஆா்) உள்ள நாடுகளுக்கு கடல் பாதுகாப்பு, பேரிடா் மேலாண்மை என ஒத்துழைப்பு வழங்குவதுடன் அந்நாடுகளை பாதுகாப்பதில் முதன்மையான சக்தியாக திகழும் இந்தியாவின் பங்களிப்பை ஜொ்மனி பாராட்டியது. இரு நாடுகளிடையேயான ராஜீய கூட்டுறவு தற்போது 25 ஆண்டுகளைக் கடந்துள்ளது ’ எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com