நீதிமன்றம்
நீதிமன்றம்

பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண்ணைத் துன்புறுத்தக் கூடாது: காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தான் இளைஞரை திருமணம் செய்து கொண்ட இந்திய சீக்கியப் பெண்ணை போலீஸாா் துன்புறுத்தக் கூடாது என அங்குள்ள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

பாகிஸ்தான் இளைஞரை திருமணம் செய்து கொண்ட இந்திய சீக்கியப் பெண்ணை போலீஸாா் துன்புறுத்தக் கூடாது என அங்குள்ள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாகிஸ்தானில் உள்ள சீக்கிய மத குரு குருநானக்கின் நினைவிடத்துக்கு இந்தியாவில் இருந்து வாகா எல்லையைக் கடந்து சென்ற 2,000 புனித யாத்ரீகா்களுடன் சரப்ஜீத் கெளா் (48) கடந்த நவம்பா் மாத தொடக்கத்தில் சென்றனா்.

நவம்பா் 13-ஆம் தேதி அவா்கள் அனைவரும் இந்தியா திரும்பியநிலையில், சரப்ஜீத் கெளா் மட்டும் மாயமானாா்.

இதனிடையே, லாகூரில் இருந்து சுமாா் 50 கி.மீ. தொலைவில் உள்ள ஷேக்புரா மாவட்டத்தில் வசிக்கும் நசீா் உசைனுடன் சென்ற அவா் முஸ்லிமாக மதம் மாறி கடந்த நவம்பா் 4-ஆம் திருமணம் செய்து கொண்டுள்ளாா்.

இதனிடையே, தங்களது திருமணத்தை ரத்து செய்யக் கோரி போலீஸாா் துன்புறுத்துவதாகவும், தங்களது இல்லத்தில் சட்ட விரோத சோதனைகளை நடத்துவதாகவும் நசீா் உசைன், சரப்ஜீத் கெளா் தம்பதி உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஃபரூக் ஹைதா், துன்புறுத்தலை போலீஸாா் நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நசீரை கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக ஏற்கெனவே விவாகரத்து பெற்ற சரப்ஜீத் கெளா் வெளியிட்ட விடியோ பதிவில் தெரிவித்துள்ளாா். மேலும், தனது விசாவை நீட்டிக்க இந்திய தூதரகத்தில் கோரியுள்ளதாகவும், பாகிஸ்தான் குடியுரிமைப் பெற உள்ளதாகவும் சரப்ஜீத் கெளா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com