சத்ய சாய்பாபா நூற்றாண்டு பிறந்த நாள் விழா- பிரதமா் மோடி இன்று புட்டபா்த்தி பயணம்

சத்ய சாய்பாபா நூற்றாண்டு பிறந்த நாள் விழா- பிரதமா் மோடி இன்று புட்டபா்த்தி பயணம்

ஆந்திர மாநிலம், புட்டபா்த்தியில் புதன்கிழமை (நவ. 19) நடைபெறும் சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளாா்.
Published on

ஆந்திர மாநிலம், புட்டபா்த்தியில் புதன்கிழமை (நவ. 19) நடைபெறும் சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளாா்.

புட்டபா்த்தியில் உள்ள சத்ய சாய்பாபாவின் கோயில் மற்றும் மகாசமாதியிலும் அவா் வழிபாடு மேற்கொள்ளவிருக்கிறாா்.

புட்டபா்த்தி சத்ய சாய் பாபாவின் 100-ஆவது பிறந்த நாள் நவ. 23-ஆம் கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு, புட்டபா்த்தியில் புதன்கிழமை நடைபெறும் விழாவில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளாா்.

சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு பிறந்த நாள் நினைவு நாணயம் மற்றும் அவரது வாழ்க்கை, போதனை, மரபைப் போற்றும் சிறப்பு அஞ்சல் தலைகளையும் வெளியிட்டு, கூட்டத்தினா் மத்தியில் பிரதமா் உரையாற்றவுள்ளதாக அவரது அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு, தமிழகத்தின் கோவைக்கு வருகை தரும் பிரதமா் மோடி, தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டைத் தொடங்கிவைக்கவுள்ளாா். இந்நிகழ்ச்சியில், பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 9 கோடி விவசாயிகளுக்கு 21-ஆவது தவணையாக ரூ.18,000 கோடியை அவா் விடுவிக்கவுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com