

இந்தியாவில் எக்ஸ் சமூக வலைத்தளம் முடங்கியிருக்கிறது, அதன் செயலி, இணையதளம் என எதுவும் பதிவேற்றம் ஆகாமல், எந்த பதிவுகளையும் இட முடியாமல் முடங்கியிருக்கிறது.
சமூக வலைத்தளமான எக்ஸ் தளம் இந்தியாவில் இன்று மாலை திடீரென முடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.
எக்ஸ் வலைதளம், செயலி இரண்டும் முடங்கியதாக மக்கள் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். சுமார் ஒரு மணிநேரமாக எக்ஸ் தளத்தில் தேடல், பதிவுகள் இடுதல் என இரண்டும் செயல்படவில்லை.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், டிவிட்டர் என்று அறியப்படும் எக்ஸ் பக்கத்தில் பதிவுகளைப் பகிர முடியாமலும், படிக்க முடியாமலும் அவதிக்குள்ளாகியிருப்பதாக தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
ஆன்டிராய்டு உள்ளிட்ட செல்போன்கள் அனைத்திலும் இந்த பிரச்னையை எதிர்கொண்டிருப்பதாகவும் பயனர்கள் பதிவு செய்து வருகிறார்கள்.
எக்ஸ் தளத்தை திறந்தால், தற்போதைக்குப் பதிவுகள் காணப்படவில்லை என்பது போன்ற தகவல்கள் வருகின்றன. பிறகு சற்று நேரத்தில் சரியானதாகவும் தகவல்கள் வெளியானாலும், ஒரு சில நகரங்களில் எக்ஸ் முடங்கியிருப்பதாகவே கூறப்படுகிறது.
எக்ஸ் தளம் முடங்குவது என்பது அவ்வப்போது நேரிடும் நிகழ்வாகவே உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.