

தாய்லாந்தில் இருந்து இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் புதியதாக 125 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
மியான்மர் நாட்டில், செயல்படும் மோசடி மையங்களில் வேலைச் செய்வதற்காக போலி தரகர்கள் மூலம் ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டு தாய்லாந்து வழியாகத் தொடர்ந்து இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய அரசு மற்றும் பாங்காக் நகரத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முயற்சியால் புதியதாக 125 இந்தியர்கள் தாய்லாந்தின் மே சோட் நகரத்தில் இருந்து இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் இன்று (நவ. 19) நாடு திரும்பியுள்ளனர்.
இதன்மூலம், கடந்த மார்ச் மாதம் முதல் மியான்மரில் இருந்து மீட்கப்பட்டு தாய்லாந்து வழியாகத் திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 1,500 ஆக உயர்ந்துள்ளதாக, பாங்காக்கில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை மே சோட் நகரத்திலிருந்து இந்திய விமானப் படையின் சிறப்பு விமானங்கள் மூலம் 11 பெண்கள் உள்பட 269 இந்தியர்கள் நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: புதிய காட்சி அனுபவம்! மோட்டோரோலாவில் மினி எல்.இ.டி., டிவி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.