

சபரிமலையில் ஐயப்பன் கோவிலில் இதுவரை 3 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநர் (ஏடிஜிபி) ஸ்ரீஜித் தெரிவித்துள்ளார்.
பக்தர்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்வது உறுதி செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கார்த்திகை மாதம் தொடங்கியதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கோவில் நிர்வாகம் திணறி வருகிறது.
இந்நிலையில் பக்தர்கள் தரிசனம் தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய ஏடிஜிபி ஸ்ரீஜித், நவம்பர் 16 முதல் தற்போது வரை 3 லட்சம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
நவ., 16 ஆம் தேதி 53,278 பேரும், நவ., 17ஆம் தேதி 98,915 பேரும் நவ., 19ஆம் தேதி 64,574 பேரும் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பக்தர்கள் பாதுகாப்பாக ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வது உறுதி செய்யப்படும் என உறுதி அளித்தார்.
முன்பதிவு செய்து சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் காவல் துறைக்குத் தெரிவிக்கலாம் என்றும் அவர்களுக்கு தகுந்த முறையில் உதவிகள் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், சன்னிதானத்தில் 1,700 பேர் உள்பட சபரிமலையில் மொத்தம் 3,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க | பாபா சித்திக் வழக்கு: அன்மோல் பிஷ்னோயிக்கு 11 நாள்கள் விசாரணைக் காவல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.