

பாபா சித்திக் கொலை வழக்கில் தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோயை 11 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தி அழைத்துவரப்பட்ட அன்மோல் பிஷ்னோயை, தில்லி விமான நிலையத்தில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் இன்று (நவ. 19) கைது செய்தனர்.
பலத்த பாதுகாப்புடன் அவரை தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரிகள் மாலை 5 மணியளவில் ஆஜர்படுத்தினர். அவரிடம் விசாரணை நடத்த 15 நாள்கள் என் ஐ ஏ தரப்பில் இருந்து கோரப்பட்டது. எனினும், 11 நாள்களுக்கு விசாரணைக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமெரிக்காவில் இருந்து 200 பேர் இன்று நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் அன்மோல் பிஷ்னோயும் அடங்குவார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று, அமெரிக்காவில் இருந்து அன்மோலை அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை நாடு கடத்தியது.
இன்று காலை தில்லி வந்த விமானத்தில் இருந்த அன்மோல் பிஷ்னோயை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
கடந்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதியில் ஹிந்தி நடிகா் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்கு தாமே காரணம் என்று தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோய் தெரிவித்தாா். சல்மானை கானை கொல்ல அந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது
இதைத்தொடா்ந்துபாந்த்ராவில் மாநில முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் பிரமுகருமான பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்டாா். அவரின் கொலைக்கு முழு பொறுப்பேற்பதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் முகநூலில் பதிவிட்டது.
இந்த குற்றங்கள் உள்பட மேலும் சில குற்ற வழக்குகளில் அன்மோல் பிஷ்னோய் குற்றவாளியாக சோ்க்கப்பட்டார்.
மேலும், போலி கடவுச்சீட்டு மூலம் அவர் வெளிநாடு சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பானு பிரதாப் என்ற பெயரில் ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் என்ற பெயரில் கடவுச்சீட்டு பெற்றுள்ளார். தந்தையின் பெயரை ராகேஷ் எனவும் மாற்றியுள்ளார்.
ஆனால், உண்மையில் இவரின் தந்தையின் பெயர் லோவிந்தர் பிஷ்னோய். இவர், பஞ்சாப் மாநிலம் ஃபசில்கா பகுதியைச் சேர்ந்தவர்.
2022ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக உள்ள அன்மோல் பிஷ்னோய், இவரின் சகோதரர் லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான பயங்கரவாத கும்பலின் தேடப்பட்டு வந்த 19வது நபராவார். இவரைப்பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ. 10 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பிகாரின் தேஜ கூட்டணித் தலைவராக நிதீஷ் குமார் தேர்வு! 10வது முறையாக முதல்வராகிறார்!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.