

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் வீரர்களை தேசிய பேரிடர் மீட்புக் குழு அனுப்பியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு உற்சவ காலத்தையொட்டி நடை திறக்கப்பட்ட 48 மணி நேரத்துக்குள் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் திரண்டதால், நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்வம் அதிகாரிகளும், போலீஸாரும் திணறி வருகின்றனா்.
அடிவாரமான பம்பையில் இருந்து சந்நிதானம் வரையான மலைப் பாதைகளில் பக்தா்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால், பல மணி நேரம் தாமதத்துடன் பக்தா்கள் மலையேறி, தரிசனம் செய்யும் நிலை உள்ளது.
கடந்த ஆண்டு 4 வெவ்வேறு நாள்களில் பக்தா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது. ஆனால் இந்த முறை, முதல் இரண்டு நாள்களிலேயே சுமாா் 2 லட்சம் பக்தா்கள் யாத்திரைக்கு வந்துள்ளனர்.
பக்தா்கள் பதினெட்டாம்படியில் சீராக ஏறவும், யாரும் வரிசையைத் தாண்டி முன்னால் செல்லாமல் இருக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
பம்பையில் பக்தா்கள் கூட்டத்தைக் குறைக்கவும், அவா்கள் பல மணி நேரம் காத்திருக்காமல் விரைவாக யாத்திரையை முடிக்கவும் நிலக்கல் பகுதியிலேயே பக்தா்களின் வருகையைக் கட்டுப்படுத்த தேவஸ்வம் வாரியம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த வீரர்கள் சபரிமலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அதன்படி, அரக்கோணத்தில் இருந்து 60 பேர் கொண்ட 2 பேரிடர் மீட்புக் குழுவினர், தேவையான உபகரணங்களுடன் சபரிமலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.