

சரத் பவாருடன் மும்பை காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் சந்தித்து வரவிருக்கும் பிரஹன் மும்பை மாநகராட்சி தேர்தல்கள் குறித்து விவாதித்தார்.
மும்பை உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதாகவும், ஒரே எண்ணம் கொண்ட கட்சிகளுடன் இணைந்து போட்டியிடப்போவதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய கெய்க்வாட்,
சரத் பவார் தனது கட்சியின் இயல்பான கூட்டாளி என்று கூறினார். அவர் ஒரு மூத்த தலைவர், உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்து விவாதிக்கவும், எங்களுடன் சேருமாறு அவருக்குக் கோரிக்கை விடுக்கவும் அவரைச் சந்தித்தேன்.
உள்ளாட்சித் தேர்தல்கள் கட்சி ஊழியர்களுக்கான தேர்தர்கள், அதனால்தான் காங்கிரஸ் தனியாகப் போட்டியிடுவதாக அவர் கூறினார்.
227 உறுப்பினர்களைக் கொண்ட பிரஹன் மும்பை மாநகராட்சிக்கான தேர்தல்கள் ஜனவரி 2026இல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 2017 இல் பெருநகரத்தில் கடைசியாக உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் படுமோசமாகச் செயல்பட்டு 30 இடங்களை மட்டுமே வென்றது.
காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸும் எதிர்க்கட்சி கூட்டணியான மகா விகாஸ் அகாதி கட்சியின் அங்கத்தினர்கள், இதில் சிவசேனா மூன்றாவது கூட்டாளியாகவும் உள்ளது.
சிவசேனா தேர்தலில் தனியாகப் போட்டியிடுவதைத் தவிர்க்கவும், நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும் காங்கிரஸை சிவசேனா கட்சி செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டது. இந்த நடவடிக்கை பாஜகவுக்கு உதவும் என்றும், மகாவிகாஸை பலவீனப்படுத்தும் என்றும் சிவசேனா எச்சரித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.