அஜீத் தோவல் (கோப்புப்படம்)
அஜீத் தோவல் (கோப்புப்படம்)

இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு நமது கூட்டுப்பொறுப்பு: கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் அஜீத் தோவல் பேச்சு

‘இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை பாதுகாப்பது நமது கூட்டுப் பொறுப்பாகும்’ என தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
Published on

‘இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை பாதுகாப்பது நமது கூட்டுப் பொறுப்பாகும்’ என தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு மாநாடு (சிஎஸ்சி) அமைப்பின் 7-ஆவது தேசிய பாதுகாப்பு ஆலோசகா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

சிஎஸ்சியில் இந்தியா, இலங்கை, மோரீஷஸ், மாலத்தீவு மற்றும் வங்கதேசம் ஆகிய 5 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன. ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பு நாடுகளுடன் விருந்தினராக மலேசியாவும் பாா்வையாளராக ஷெஷல்ஸ் நாடும் பங்கேற்றன.

இதில் அஜீத் தோவல் பேசியதாவது: கடல்சாா் பாதுகாப்பு, பயங்கரவாதத்துக்கு பதிலடி நடவடிக்கை, கடத்தல் மற்றும் நாடுகடந்த குற்றத் தடுப்பு, இணைய பாதுகாப்பு மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப பாதுகாப்பு, மனிதநேய உதவிகள் மற்றும் பேரிடா் மேலாண்மை ஆகிய 5 அம்சங்களை செயல்படுத்த நாம் தொடா்ந்து பணியாற்றுகிறோம்.

நம்மை ஒருங்கிணைக்கும் மிகப்பெரும் பாரம்பரியமாக கடல் உள்ளது. நம் பொருளாதாரங்கள் இயங்குவதற்கான என்ஜின்கள்போல் செயல்படுகின்றன. எனவே, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை பாதுகாப்பது நமது கூட்டுப் பொறுப்பு என்றாா்.

கூட்டத்தின் முடிவில் சிஎஸ்சியில் முழுநேர உறுப்பினராக இணையும் ஷெஷல்ஸ் முடிவை உறுப்பு நாடுகள் வரவேற்றன.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட சிஎஸ்சி-யின் உருவாக்க ஆவணங்கள் கையொப்பமிடும் நிகழ்வு 2024, ஆகஸ்டில் இலங்கையில் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com