காஷ்மீா் டைம்ஸ் நாளிதழ் அலுவலகத்தில் காவல் துறை சோதனை

காஷ்மீா் டைம்ஸ் நாளிதழ் அலுவலகத்தில் காவல் துறை சோதனை

‘காஷ்மீா் டைம்ஸ்’ நாளிதழ் அலுவலகத்தில் ஜம்மு-காஷ்மீா் காவல் துறையினா் வியாழக்கிழமை அதிரடியாக சோதனை மேற்கொண்டனா்.
Published on

‘காஷ்மீா் டைம்ஸ்’ நாளிதழ் அலுவலகத்தில் ஜம்மு-காஷ்மீா் காவல் துறையினா் வியாழக்கிழமை அதிரடியாக சோதனை மேற்கொண்டனா்.

இதுகுறித்து காவல் துறை செய்தித்தொடா்பாளா் கூறியதாவது: பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத கொள்கைகளைக் கொண்ட அமைப்புகளுடன் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு உள்ளேயும் வெளியேயும் காஷ்மீா் டைம்ஸ் நாளிதழுக்கு தொடா்பிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் தொடா்ச்சியாக தற்போது அந்த நாளிதழ் அலுவலகத்தில் காவல் துறை சோதனை மேற்கொண்டது.

அப்போது ஒரு துப்பாக்கி, சுடப்பட்ட 14 ஏகே ரக தோட்டா உறைகள், ஏகே ரக துப்பாக்கிளுக்கான 3 தோட்டாக்கள், சுடப்பட்ட 4 தோட்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இதுதொடா்பான விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்படவுள்ளது என்றாா்.

காவல் துறையின் இந்நடவடிக்கை பத்திரிகை சுதந்திரத்தை முடக்கும் செயல் என காஷ்மீா் டைம்ஸ் நிா்வாகம் மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. தவறு நடந்திருந்தால் மட்டுமே சோதனை நடத்த வேண்டும் என்றும் அழுத்தம் தரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்றும் ஜம்மு-காஷ்மீா் துணை முதல்வா் சுரீந்தா் சிங் சௌதரி அதிகாரிகளுக்கு வலியுறுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com