பிகாரில் புதிய பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கான இலாக்காகளை முதல்வர் நிதீஷ் குமார் வெள்ளிக்கிழமை ஒதுக்கீடு செய்துள்ளார்.
அதன்படி, துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரிக்கு உள்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் விஜய்குமார் சின்ஹாவுக்கு வருவாய், நில சீர்திருத்தங்கள், சுரங்கம் மற்றும் புவியியல், பிஜேந்திர பிரசாத் யாதவ் - நிதி, எரிசக்தி துறை, சுனில்குமார் - கல்வித் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை பதவியேற்ற 26 அமைச்சர்களில் 18 பேருக்கு மட்டுமே இன்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த 20ஆண்டுகளாக தம்மிடமே வைத்திருந்த உள் துறையை முதல்முறையாக கூட்டணி கட்சியான பாஜவுக்கு நிதீஷ் குமார் விட்டுக் கொடுத்துள்ளார். பிகாா் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி இமாலய வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்தது.
மாநில முதல்வராக 10-ஆவது முறையாக நிதீஷ் குமாா் வியாழக்கிழமை பதவியேற்றாா்.
பாஜக மூத்த தலைவர் சாம்ராட் சௌத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் துணை முதல்வர்கள் உள்பட 26 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
பாஜகவில் இருந்து 14 பேர், ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து 8 பேர், ராஷ்ட்ரீய லோக் சக்தி (ராம்விலாஸ்) கட்சியில் இருந்து 2 பேர், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சாவில் இருந்து தலா ஒருவர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.