

புதுதில்லி: அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில், விமானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தை பறிமுதல் செய்து, அதன் கடத்தல் வலையமைப்பை அம்பலப்படுத்தியுள்ளது வருவாய் புலனாய்வு இயக்குநரகம்.
முன்னதாக நவம்பர் 14 ஆம் தேதி, ஜெட்டாவிலிருந்து விமானத்தில் வந்த ஒரு பயணியிடமிருந்து ரூ.1.62 கோடி மதிப்புள்ள 1,246.48 கிராம் 24 காரட் தங்கத்தை டிஆர்ஐ பறிமுதல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.
வெள்ளை நாடாவால் தங்கம் பேக்கிங் செய்து, பயணிகள் இருக்கைக்கு அடியில் உள்ள லைஃப் ஜாக்கெட் பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்தடுத்த விசாரணையில், அகமதாபாத்தில் ஒரு ஓட்டலை நடத்தி, முனைவர் பட்டம் பெற்றவர் என்று கூறிக் கொள்ளும் ஒருவர், முக்கிய ஒருங்கிணைப்பாளராக அடையாளம் காணப்பட்டது.
விசாரணையில் திருப்புமுனையாக மூத்த நிர்வாகி ஒருவரும், உதவி மேலாளர் ஒருவர் உள்பட விமான நிறுவனத்தின் இரண்டு ஊழியர்களும் கடத்தல் முயற்சியை எளிதாக்குவதில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டது.
கடந்த 2 மாதங்களில் 10க்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் சுமார் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள இதேபோன்ற தங்கப் பொருட்களை கும்பல் கடத்தியிருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க: 1:5 விகிதத்தில் பங்குப் பிரிவை அறிவித்துள்ள கோடக் மஹிந்திரா வங்கி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.