

உத்தரப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணுடன் நடனமாடிய மருத்துவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், ஷாம்லி அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் தற்காலிக மருத்துவராக வக்கார் சித்திக் பணியாற்றி வந்தார்.
இவர் மருத்துவமனையின் மேல் மாடியில் உள்ள அறையில் தனது வருங்கால மனைவி எனக் கூறப்படும் இளம் பெண்ணுடன் நடனமாடும் விடியோ புதன்கிழமை வெளியாகி வைரலானது.
இந்த விடியோவுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதுகுறித்து மருத்துவர் சித்திக்கிடம் மருத்துவ அதிகாரி விளக்கம் கோரினார். ஆனால் அதற்கு சித்திக் திருப்திகரமான விளக்கம் அளிக்காத காரணத்தால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உடனே சித்திக் அவசரகாலப் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையும் காலி செய்யப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்த விரிவான அறிக்கை மூத்த சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்த மருத்துவ அதிகாரி வீரேந்திர சிங், “இதுபோன்ற நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது. சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் துறை ரீதியான மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.