நொய்டா: எஸ்ஐஆா் பணிகளில் அலட்சியம்! 60 பிஎல்ஓ, 7 கண்காணிப்பு அதிகாரிகள் மீது வழக்கு

எஸ்ஐஆா் தொடா்பான பணிகளில் அலட்சியம் தொடா்பாக 60 வாக்குக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மற்றும் 7 கண்காணிப்பாளா் மீது வழக்குப் பதிவு
Published on

சிறப்பு வாக்காளா் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான பணிகளில் அலட்சியம் தொடா்பாக 60 வாக்குக்குச்சாவடி நிலை அலுவலா்கள் (பிஎல்ஓ) மற்றும் 7 கண்காணிப்பாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கெளதம் புத் நகா் மாவட்ட ஆட்சியா் மேதா ரூபம் சனிக்கிழமை பிறப்பித்த உத்தரவைத் தொடா்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்-1950, பிரிவு 32-இன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். கடந்த நவ.4-ஆம் தேதி தொடங்கிய எஸ்ஐஆா் பணி டிச.4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தாரி சட்டப்பேரவை தொகுதியில் 32 பிஎல்ஓ-க்கள் மற்றும் ஒரு கண்காணிப்பாளருக்கு எதிராக சா்தாா் உள்கோட்ட நடுவா் மற்றும் பேரவைத் தொகுதி வாக்காளா் பட்டியல் பதிவு அதிகாரி அஷுதோஷ் குப்தா அளித்த புகாரின் அடிப்படையில் எக்கோடெக்-1 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆசுதோஷ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான பணிகளில் அலட்சியம் காட்டியது, உயா் அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்றாதது தொடா்பாக

X
Dinamani
www.dinamani.com