

பெங்களூரில் வங்கிப் பணம் ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் காவலா் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர், அந்த கும்பலுக்கு காவலர்தான் பயிற்சி கொடுத்தார் என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆறு மாநிலங்கள், 200 காவலர்கள், போனில் பதிவான தகவல்கள், சிசிடிவி கேமரா காட்சிகள், 72 மணி நேர தீவிர தேடுதல் பணியில், பெங்களூரில் வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான தலைமைக் காவலர் நாயக், குறைந்தபட்ச ஆதாரங்கள் கிடைக்காத வகையில், குற்றத்தை திட்டமிட்டு, இளைஞர்களுக்கு அதற்குரிய பயிற்சி கொடுத்து கொள்ளைத் திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார். பணம் நிரப்பும் வேனில் பணியாற்றியவர், வேன் எங்கே இருக்கிறது என்ற தகவல்களை திரட்டி கொடுத்திருக்கிறார்.
கா்நாடக மாநிலம், பெங்களூரில் கடந்த 19ஆம் தேதி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்புவதற்காக பல கோடி ரூபாய் பணத்துடன் சென்ற வாகனத்தை வழிமறித்த கும்பல், தங்களை ரிசா்வ் வங்கி அதிகாரிகள் எனக்கூறி வாகனத்தில் இருந்த ரூ. 7.11 கோடியை கொள்ளையடித்தது.
இந்த சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டது குறித்து காவல்துறை கூறுகையில், ரிசா்வ் வங்கி அதிகாரிகளைப்போல நாடகமாடி ரூ. 7.11 கோடி வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
200 காவலர்களைக் கொண்ட 11 தனிப்படை இந்த சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கைதானவர்களில் கோவிந்தபுரா காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா் அன்னப்பா, வங்கிக்கு பணம் எடுத்துச் செல்லும் சி.எம்.எஸ். இன்ஃபோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியா் சேவியா், வாகன பொறுப்பாளா் கோபி ஆகிய 3 பேர் கைதாகினர்.
கிட்டத்தட்ட துல்லியமாக திட்டமிட்டு, அதன்படி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியிருக்கிறது. பணம் கொள்ளையடிக்கப்பட்டதில், வாகனத்துக்குள் இருந்த ஒருவர் உதவியிருக்கலாம் என்பதும், கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனமும்தான் முக்கிய துப்பாக இருந்தது. பல போலி வாகன எண்களுடன் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கைதாவதிலிருந்து தப்பிக்க கொள்ளையர்கள் வாட்ஸ்ஆப் கால் வழியாக பல்வேறு மொழிகளில் பேசியிருக்கிறார்கள்.
இவர்களைப் பிடிக்க கோவா, தமிழகம், தெலங்கானா என ஆறு மாநிலங்களுக்கு தனிப்படையினர் விரைந்தனர். இந்த கொள்ளைச் சம்பவத்துக்கு மூன்று மாதங்களாக திட்டம் தீட்டி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
அதன்படி, பணம் கொண்டு செல்லும் வாகனத்தை இவா்கள் பின்தொடா்ந்துள்ளனா். சிசிடிவி கேமரா பொருத்தப்படாத பாதையை தோ்வுசெய்து கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனா். இந்த சம்பவம் நிகழ்ந்த 54 மணி நேரத்திற்குள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதற்காக போலீஸாரை பாராட்டுகிறேன்.
கொள்ளை சம்பவத்தை செயல்படுத்தியதோடு, கொள்ளையடித்த பிறகு எங்கு செல்ல வேண்டும் என்பதை திட்டமிட்டதில் 8 போ் கொண்ட கும்பல் ஈடுபட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் கொள்ளையடிக்கப் பயன்படுத்திய வாகனம் குறித்த விவரங்கள் கிடைத்ததுதான் விசாரணையின் முக்கிய அம்சமாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.