தில்லியில் காற்று மாசு: வன்முறையாக மாறிய போராட்டம்; 15 பேர் கைது!

தில்லியில் காற்று மாசுக்கு எதிராக போராட்டம்...
Delhi pollution
IANS
Published on
Updated on
1 min read

தில்லியில் மோசமான காற்று மாசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியது.

தில்லியில் காற்று மாசு மிகவும் மோசம் பிரிவில் உள்ளது. மக்கள் வாழத் தகுதியில்லாத நகரமாக இருப்பதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தில்லியில் காற்று மாசுக்கு எதிராக நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை தில்லியில் இந்தியா கேட் முன்பாக போராட்டம் நடைபெற்றது.

அப்போது அங்குள்ள சாலையை சுத்தம் செய்ய முயன்ற ஊழியர்கள் மீது சிலர் 'பெப்பர் ப்ரே'வை அடித்ததாகக் கூறப்படுகிறது. சிலர் காவல்துறையினர் மீதும் பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிட பலமுறை கோரிக்கை விடுத்தும் போராட்டக்காரர்கள் நகர மறுத்ததாக போலீசார் தெரிவித்தனர். போராட்டக்காரர்கள் பெப்பர் ஸ்பிரே கொண்டு தாக்கியதில் சில காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 15 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனால் நேற்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Summary

Delhi pollution protests unfolded at India Gate: 15 arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com