

தில்லி உயிரியல் பூங்காவில் இருந்து தப்பிச்சென்ற நரிகளில் இரண்டு மீண்டும் அதன் இருப்பிடத்திற்கே திரும்பியுள்ளன.
எனவே, மீதமுள்ள ஒன்று அல்லது இரண்டு நரிகளைத் தேடி வருவதாக பூங்கா இயக்குநர் சன்ஜித் சிங் பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
தில்லி உயிரியல் பூங்காவில் பொதுமக்களுக்குத் திறக்கப்படாத குள்ளநரி அடைப்புக்கு அருகிலுள்ள அடா்ந்த காட்டுப் பகுதிக்குள் 3 முதல் 4 குள்ளநரிகள் சனிக்கிழமை காணப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
ஞாயிற்றுக்கிழமை காலைக்குள், ஒரு குள்ளநரி மீட்கப்பட்டது. மற்ற குள்ளநரிகளைக் கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
காட்டுப் பகுதிக்குள் பொறி கூண்டுகள் வைக்கப்பட்டு ஊழியா்கள் நியமிக்கப்பட்டுள்ளன. வேலியில் உள்ள இடைவெளி வழியாக விலங்குகள் தப்பிச் சென்றாக சந்தேகிக்கப்படுகிறது.
இருப்பினும், உரிய காரணத்தை கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதனால் உயிரியல் பூங்காவுக்கு வரும் பாா்வையாளா்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தில்லி பூங்காவின் இணை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேசமயம் அனைத்து விலங்குகளும் கணக்கில் வரும் வரை தேடுதல் நடவடிக்கைகள் தொடரும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.