

உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் வன்முறை நடைபெற்ற முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி நகரம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சம்பல் பகுதியில் ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் பாரம்பரியமிக்க ஹரிஹர கோயில் பிரதானமாக இருந்ததாகவும், முகலாய ஆட்சியாளா் பாபா் கோயிலின் ஒரு பகுதியை இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து உச்ச நீதிமன்ற வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஜாமா மசூதியில் நடத்தப்பட்ட ஆய்வின்போது சம்பலின் கோட் கார்வி பகுதியில் வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு காரணமாக நான்கு பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர்.
அதிகாரிகள் முழு மாவட்டத்தையும் 19 பாதுகாப்புப் பிரிவுகளாகப் பிரித்து சர்ச்சைக்குரிய மதத் தலமான ஹிந்துபாரா கேடா மற்றும் அஞ்சுமன் திராஹா உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் கொடி அணிவகுப்பை நடத்தினர்.
குடியிருப்பாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதே கொடி அணிவகுப்பின் நோக்கம். காவல்துறையும் நிர்வாகமும் அவர்களுடன் உறுதியாக நிற்கின்றன என்பதைப் பொதுமக்களுக்கு உறுதியளிப்பதாகும் என்று மாவட்ட நீதிபதி ராஜேந்தர் பென்சியா கூறினார்.
இதனிடையே சம்பல் மாவட்டத்தில் வன்முறை நிகழ்ந்த நாளையொட்டி இன்று நகரம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.