தர்மேந்திரா மறைவு: தலைவர்கள் இரங்கல்

நடிகர் தர்மேந்திரா மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருவது குறித்து...
தர்மேந்திரா
தர்மேந்திரா பிடிஐ (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

நடிகர் தர்மேந்திரா மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா, இதய கோளாறு மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினார். வீட்டில் இருந்தவாறு சிகிச்சை எடுத்து வந்தநிலையில், இன்று (நவ. 24) அவர் உயிர் பிரிந்தது.

தர்மேந்திராவின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

நரேந்திர மோடி

சினிமாவில் தான் ஏற்ற ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஆழமான நடிப்பை கொடுத்த அற்புதமான நடிகர் தர்மேந்திரா. இவர் நடித்த வேடங்கள் எண்ணற்ற மக்களின் மனதைத் தொடும் வகையில் இருந்தது. தனது எளிமை, பணிவு, அரவணைப்புக்காக என்றுமே நினைவுகூரப்படுவார். இந்த இக்கட்டான சூழலில் அவரின் குடும்பத்துடனும் அவரின் ஒப்பற்ற ரசிகர்கள் மற்றும் நண்பர்களுடனும் துணை நிற்கிறேன். ஓம் சாந்தி எனப் பதிவிட்டுள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே

இந்தியத் திரையுலகம் இன்று ஒரு விலைமதிப்பற்ற நட்சத்திரத்தை இழந்துவிட்டது. புகழ்பெற்ற நடிகர் தர்மேந்திரா நம்முடன் இல்லை. 2012 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது பெற்ற தர்மேந்திரா, பல தலைமுறைகளாக சினிமா ஆர்வலர்களின் இதயங்களை ஆண்டார். மேலும், தனது நடிப்பு மற்றும் எளிமையான வாழ்க்கையால் ஆழமான தோற்றத்தை ஏற்படுத்தினார்.

அவரது மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி

பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா ஜியின் மறைவுச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவரின் மறைவு இந்திய கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக சினிமாவுக்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பு எப்போதும் மரியாதையுடனும் பாசத்துடனும் நினைவுகூரப்படும்.

தர்மேந்திராவுக்கு எனது மனமார்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையும் படிக்க | நடிகர் தர்மேந்திரா காலமானார்!

Summary

Veteran Actor Dharmendra died Leaders condolences

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com