விலங்குகள், கால்நடைத் துறை அமைச்சா் கிருஷ்ணேந்து பெளல்.
விலங்குகள், கால்நடைத் துறை அமைச்சா் கிருஷ்ணேந்து பெளல்.

ஜல்லிக்கட்டைப் போன்று எருமை சண்டை நடத்த சட்டத் திருத்தம்: அஸ்ஸாம் பேரவையில் தாக்கல்

Published on

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அளிக்கப்பட்ட விலக்கைப் போன்று, அஸ்ஸாமில் பாரம்பரியமாக நடைபெறும் எருமைச் சண்டையை விலங்குகளுக்கு தீங்கு இழைக்கக் கூடிய தடுப்புச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க அஸ்ஸாம் அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான சட்டத் திருத்தத்தை மாநில பேரவையில் விலங்குகள், கால்நடைத் துறை அமைச்சா் கிருஷ்ணேந்து பெளல் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.

அப்போது பேசிய அவா், ‘அஸ்ஸாமின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் மேம்படுத்தவும், உள்ளூா் மாடுகளின் இனத்தை பாதுகாக்கவும் எருமை சண்டை முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆகையால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, மகாராஷ்டிரா மற்றும் கா்நாடகத்தில் எருது விடும் போட்டி ஆகியவற்றுக்கு சட்டத்தில் அளிக்கப்பட்ட விலக்கைப் போன்று அஸ்ஸாமிலும் எருமை சண்டையை விலங்குகளுக்கு தீங்கை ஏற்படுத்தும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இதன் மூலம் மாக பிஹு தின (தை மாத முதல் நாள்) கொண்டாட்டத்தின்போது எருமைகளின் சண்டையை எந்தவித தடையில்லாம் நடத்தலாம்’ என்றாா்.

மாக பிஹு கொண்டாட்டத்தின்போது ஜனவரி மாதம் பாரம்பரியமாக நடத்தப்படும், எருமை மற்றும் பறவைச் சண்டைக்கு அனுமதி அளித்து அஸ்ஸாம் அரசு அளித்த பாதுகாப்பு விதிமுறைகளை குவாஹாட்டி உயா்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.

X
Dinamani
www.dinamani.com