

அயோத்தியில் ஏற்றப்பட்டிருப்பது வெறும் கொடி அல்ல, இந்திய நாகரிகத்தின் மறுமலர்ச்சி என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலின் கட்டுமானம் முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், அயோத்தி ஸ்ரீபாலராமர் கோயில் பிரதான கோபுரத்தின் உச்சியில் 191 அடி உயரமுள்ள பிரதான கோபுரத்தின் உச்சியில் 22 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்டு தயாரிக்கப்பட்ட காவிக் கொடியை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஏற்றிவைத்தார்.
இதையடுத்து, அயோத்தி கோயிலில் கூடியிருந்த பக்தர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:
“முழு இந்தியாவும் உலகமும் இன்று ராம மயமாக உள்ளது. ஒவ்வொரு ராம பக்தரின் இதயத்திலும் அசாதாரண திருப்தி ஏற்பட்டுள்ளது. எல்லையற்ற நன்றியுணர்வும், அளவிட முடியாத இயற்கைக்கு அப்பாற்பட்ட பேரின்பமும் ஏற்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளின் காயங்கள் குணமடைந்துள்ளன. பல நூற்றாண்டுகளின் சத்தியம் இன்று நிறைவேறி இருக்கிறது. 500 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருந்த அந்த தியாகத்தின் நிறைவு நாள்.
இந்த வெறும் காவிக் கொடி அல்ல. இது இந்திய நாகரிகத்தின் மறுமலர்ச்சியின் கொடி. காவி நிறம், சூரிய வம்சத்தின் சின்னம், 'ஓம்' வார்த்தை மற்றும் கோவிதார மரம் ராம ராஜ்ஜியத்தின் மகிமையை வெளிப்படுத்துகின்றன. இந்தக் கொடி ஒரு தீர்மானம், வெற்றி, படைப்புக்கான போராட்டக் கதை. 100 ஆண்டுகால போராட்டத்தின் வடிவம்.
அடுத்துவரும் ஆயிரக்கணக்கான நூற்றாண்டுகளுக்கு, ராமரின் மதிப்புகளை இந்தக் கொடிப் பறைசாற்றும். உண்மைதான் தர்மம். பாகுபாடு அல்லது வலி இருக்கக்கூடாது, அமைதியும் மகிழ்ச்சியும் மட்டுமே இருக்க வேண்டும். வறுமை இருக்கக்கூடாது, யாரும் உதவியற்றவர்களாக இருக்கக்கூடாது.
கோயிலுக்கு வந்து நேரில் வணங்க முடியாதவர்கள், தொலைதூரத்தில் இருந்து கோயில் கொடியை வணங்கினாலே, நேரில் வணங்கியவர்களுக்கு கிடைக்கும் அதே புண்ணியம் கிடைக்கும் என்று நமது வேதங்கள் கூறுகின்றன. இந்தக் கொடி, யுகங்கள் கடந்து மானிட சமூகம் முழுமைக்கும் ஸ்ரீ ராமரின் கட்டளைகளையும் உத்வேகங்களையும் எடுத்துரைக்கும்.
இந்த மறக்க முடியாத தருணத்தில் உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான ராம பக்தர்களுக்கு கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ராமர் கோயில் கட்டுவதற்கு பங்களித்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ராம் கோவில் கட்டுமானத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு தொழிலாளி, கலைஞர், கட்டடக் கலை வல்லுநர், பணியாளர் அனைவரையும் வாழ்த்துகிறேன்.” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.