வாட்ஸ்ஆப் செயலியின் இதயத் துடிப்பு இந்தியா! 6 நாடுகளின் மொத்த பயனர்களைவிட அதிகம்!

வாட்ஸ்ஆப் செயலியின் நாடு வாரியான பயனர்களின் தரவுகள்...
வாட்ஸ்ஆப்
வாட்ஸ்ஆப்
Published on
Updated on
1 min read

வாட்ஸ்ஆப் செயலியின் இதயத் துடிப்பாக இருக்கும் இந்தியாவில் 53.5 கோடி பயனர்கள் உள்ளனர். இது, மொத்த பயனர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதத்துக்கும் அதிகமாகும்.

இந்த எண்ணிக்கை அடுத்த 6 இடங்களில் இருக்கும் நாடுகளின் மொத்த பயனர்களைவிட அதிகமாகும்.

வாட்ஸ்ஆப் செயலி முதல்முறையாக கடந்த நவம்பர் 2009 ஆம் ஆண்டு, ஐஓஎஸ் பயனர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், ஆகஸ்ட் 2010 ஆம் ஆண்டு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் தனது சேவையை விரிவுபடுத்தியது. முதல் 20 கோடி பயனர்களை எட்ட 4 மாதங்கள் ஆனது.

பின்னர், 2014 ஆம் ஆண்டு முகநூல் நிறுவனம், வாட்ஸ்ஆப் செயலியை 19 பில்லியன் டாலருக்கு வாங்கியது. தற்போது 300 கோடி செயலில் உள்ள பயனர்களைக் கொண்ட செயலியாக வளர்ந்துள்ளது.

இந்தியாவில் மட்டும் 53.5 கோடி பயனர்கள் வாட்ஸ்ஆப் செயலியைப் பயன்படுத்தி வருகிறார்கள். அமெரிக்காவில் 10 கோடி பேர் இந்த செயலியைப் பயன்படுத்துகிறார்கள்.

உலகளவில் அதிகமானோர் பயன்படுத்தும் மொபைல் மெசஞ்சர் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கிறது. நாளொன்றுக்கு 10,000 கோடிக்கு அதிகமான குறுஞ்செய்திகள், 700 கோடி குரல் குறுஞ்செய்திகளும் வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பப்படுகின்றன.

அதிகபட்சமாக இந்த செயலியை இந்தியாவில் கடந்தாண்டு 59 கோடி பேர் பயன்படுத்தினர். தற்போது 53.5 கோடியாக குறைந்துள்ளது.

வயது வாரியாக

வாட்ஸ்ஆப் செயலியைப் பயன்படுத்துபவர்களில் 60 சதவீதம் பேர் ஜென் ஸீ (1997 - 2012 காலகட்டத்தில் பிறந்தவர்கள்) மற்றும் மில்லினியல்கள் (1981 - 1996 காலகட்டத்தில் பிறந்தவர்கள்) தலைமுறையைச் சார்ந்தவர்கள்.

18-34 வயதுடையவர்கள் - 31%

35-44 வயதுடையவர்கள் - 27%

45-64 வயதுடையவர்கள் - 20%

65+ வயதுடையவர்கள் - 11%

உலகளவில் மொத்த பயனர்களில் 47.7 சதவீதம் பேர் பெண்கள்.

செயலில் உள்ள பயனர்கள் (2025)

இந்தியா - 53.5 கோடி

பிரேசில் - 12.4 கோடி

இந்தோனேசிய - 9.4 கோடி

ரஷியா - 7.2 கோடி

மெக்சிகோ - 6.5 கோடி

அமெரிக்கா - 6.4 கோடி

ஜெர்மனி - 5.3 கோடி

பிரிட்டன் - 4.1 கோடி

இத்தாலி - 3.7 கோடி

ஸ்பெயின் - 3.2 கோடி

Summary

India is the heartbeat of WhatsApp! More than the combined users of 6 countries!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com