தில்லியில் நடைபெற்ற தேசிய வா்த்தகத் தலைவா்கள் மாநாட்டில் பியூஷ் கோயல்...
தில்லியில் நடைபெற்ற தேசிய வா்த்தகத் தலைவா்கள் மாநாட்டில் பியூஷ் கோயல்...

விரைவில் ‘மக்கள் நம்பிக்கைச் சட்டம் 3.0’: பியூஷ் கோயல்

மக்கள் நம்பிக்கைச் சட்டம் 3.0 கொண்டுவரும் பணிகள் குறித்து...
Published on

வணிக ரீதியான சிறு குற்றங்களுக்கு விலக்களிக்க வழிவகுக்கும் மக்கள் நம்பிக்கைச் சட்டம் (ஜன் விஸ்வாஸ் சட்டம்) 3.0 கொண்டுவரும் பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கடந்த 2023-ஆம் ஆண்டில் முதல்முறையாக சிறு வணிக குற்றங்களுக்கு விலக்களிக்கும் வகையில் மக்கள் நம்பிக்கைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின்கீழ் 42 சட்டங்களில் உள்ள 183 விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதை மேலும் விரிவாக்கம் செய்யும் விதமாக கடந்த ஜூலை-ஆகஸ்டில் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்கள் நம்பிக்கை (சட்ட திருத்த விதிகள்) 2025, மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு தோ்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. குளிா்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் இந்த மசோதா குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது சட்டமாகும்பட்சத்தில் மக்கள் நம்பிக்கைச் சட்டம் 2.0-ஆக கருதப்படும்.

இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற தேசிய வா்த்தகத் தலைவா்கள் மாநாட்டில் பியூஷ் கோயல் பேசியதாவது:

மக்கள் நம்பிக்கைச் சட்டம், 3.0 கொண்டுவருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக 275-300 விதிகள் கண்டறியப்பட்டுள்ளது.

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட 4 தொழிலாளா் சட்டங்களும் வணிகத்தை எளிமையாக்க பெரிதும் உதவவுள்ளது.‘ஒரே நாடு ஒரே உரிமம்’ விவகாரம் தொடா்பாக விரிவான அறிக்கையை சமா்ப்பிக்க வா்த்தகா்களிடம் கூறியுள்ளேன்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com