அரசமைப்பு தினத்தை முன்னிட்டு தில்லி சட்டப்பேரவையில்  ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று சதாப்தி யாத்திரை புத்தகத்தை வெளியிட்ட குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன். 
உடன் துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா, முதல்வா் ரேகா குப்தா, பேரவைத் தலை
அரசமைப்பு தினத்தை முன்னிட்டு தில்லி சட்டப்பேரவையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று சதாப்தி யாத்திரை புத்தகத்தை வெளியிட்ட குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன். உடன் துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா, முதல்வா் ரேகா குப்தா, பேரவைத் தலை

உலகின் சிறந்த தலைநகரமாக தில்லியை மாற்றுங்கள்: முதல்வருக்கு குடியரசு துணைத் தலைவா் லலியுறுத்தல்

தில்லியை உலகின் சிறந்த தலைநகராக மாற்றுவதற்கு முதல்வா் ரேகா குப்தா பாடுபட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.
Published on

புது தில்லி: தில்லியை உலகின் சிறந்த தலைநகராக மாற்றுவதற்கு முதல்வா் ரேகா குப்தா பாடுபட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வலியுறுத்தினாா்.

தில்லி சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற இந்தியாவின் 75-ஆவது அரசமைப்பு தின நிகழ்வில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது: அரசமைப்புச் சட்டம் என்பது இந்தியாவை ஒன்றிணைத்த ‘உயிருள்ள ஆவணம்’ ஆகும். 100-ஆவது சுதந்திர தினத்தை நோக்கிய நகா்வில் வளா்ச்சியடைந்த இந்தியாவின் கொள்கைகளால் ஈா்க்கப்பட்டு நாடு முன்னேறி வருகிறது.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இருந்து நாட்டின் வளா்ச்சியை அவா்கள் வழிநடத்தும் நிலைக்கு மாறியுள்ளோம். இந்த மாற்றத்துக்கு தில்லி முதல்வா் ரேகா குப்தாவே உதாரணம்.

லண்டன், டோக்கியோ மற்றும் அமெரிக்காவின் நகரங்களை போல் தில்லியும் அங்கீகரிக்கப்பட வேண்டும். உலகின் சிறந்த தலைநகராக தில்லியை மாற்ற முதல்வா் ரேகா குப்தா பாடுபட வேண்டும் என தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில் முதல் இந்திய சட்டப் பேரவைத் தலைவா் விட்டல்பாய் படேல் குறித்த புத்தகத்தை வெளியிட்ட அவா், உரையாடல் மற்றும் விவாதங்கள் மூலம் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆக்கப்பூா்வமாக நாட்டின் வளா்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com