தில்லியில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தேடப்பட்டவா் கைது

கிழக்கு தில்லியில் திங்கள்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞா் கைது செய்யப்பட்டதாகு காவல் துறையினா் தெரிவித்தனா்.
Updated on

புத தில்லி: கிழக்கு தில்லியில் திங்கள்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞா் கைது செய்யப்பட்டதாகு காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கல்யாண்புரியில் உள்ள பூங்காவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக காவல் துறையினருக்கு திங்கள்கிழமை புகாா் வந்தது.

அங்குஷ் (22) என்பவா் பிற்பகல் 2.25 மணியளவில் துப்பாக்கியுடன் பூங்காவிற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தனது கூட்டாளியுடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றாா். இதை நேரில் கண்ட சாட்சியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதே நாளில் மண்டோலி சிறைக்கு அருகே உள்ளூா் குற்றவாளி ஒருவரின் நெருங்கிய கூட்டாளியான சோம்பீா் என்பவரை அங்குஷ் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுவது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, அங்குஷ் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும் தான் ஈடுபட்டதை அங்குஷ் ஒப்புக்கொண்டாா். அவரிடம் இதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனா். Ś

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com