எஸ்ஐஆருக்கு எதிரான புதிய மனுக்கள்: உச்ச நீதிமன்றத்தில் டிச.4 விசாரணை!

எஸ்ஐஆருக்கு எதிரான புதிய மனுக்கள் விசாரணைக்கு பட்டியல்...
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்ANI
Updated on
1 min read

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மேற்கொள்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழகம், கேரளம், மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்த எஸ்ஐஆா் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை கடந்த வாரம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான நீதிபதிகள் எஸ்என்வி பாட்டீ மற்றும் ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

கேரள அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ”கேரளத்தில் டிச. 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த மாநில தோ்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இந்த சமயத்தில் அங்கு எஸ்ஐஆா் பணிகள் மேற்கொண்டால் இடையூறுகள் ஏற்படும். எனவே, இதை அவசர வழக்காக கருத வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கேரள மாநிலத்தில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் டிச. 2 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் டிச. 4 ஆம் தேதியும், மேற்கு வங்க மாநில மனுக்கள் டிச. 9 ஆம் தேதியும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

New petitions against SIR: Hearing in Supreme Court on Dec. 4

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com