ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ் கோப்புப் படம்

இந்தியா-கனடா யுரேனியம் ஒப்பந்தத்துக்கு முந்தைய காங்கிரஸ் அரசே காரணம்: ஜெய்ராம் ரமேஷ்

இந்தியா, கனடா இடையே யுரேனியம் விநியோக ஒப்பந்தம் இறுதியாகும் நிலையில், இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமே காரணம்.
Published on

புது தில்லி: இந்தியா, கனடா இடையே யுரேனியம் விநியோக ஒப்பந்தம் இறுதியாகும் நிலையில் உள்ளதாக கூறப்படும் நிலையில், இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமே முழுக் காரணம் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளாா்.

தென்னாப்பிரிக்காவில் அண்மையில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமா் மோடி, கனடா பிரதமா் மாா்க் காா்னியுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும், 2030-க்குள் இருதரப்பு வா்த்தகத்தின் மதிப்பை 50 பில்லியன் டாலராக இரட்டிப்பாக்கும் நோக்கில் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்த பேச்சுவாா்த்தையைத் தொடங்கவும் இரு தலைவா்களும் ஒப்புக் கொண்டனா்.

இந்தச் சூழலில், அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கு கனடா யுரேனியம் விநியோகிப்பதற்கான 2.8 பில்லியன் டாலா் மதிப்பிலான ஒப்பந்தம் இறுதியாகும் நிலையில் உள்ளதாக அந்நாட்டு ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடந்த 2008-இல் அப்போதைய பிரதமா் மன்மோகன் சிங்கின் மதிநுட்பத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தால்தான், தற்போது இந்தியா-கனடா யுரேனியம் விநியோக ஒப்பந்தம் சாத்தியமாகிறது. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு அப்போது எதிா்க்கட்சியாக இருந்த பாஜக எதிா்ப்பு தெரிவித்தது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com