

பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தின் அடிப்படையில், 19 வயது நபரை ஜம்மு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜம்முவின் ரீஸி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர், பத்தின்டி பகுதியில் வாழ்ந்து வந்த நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்திலும், பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது செல்போனிலிருந்து பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்க அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் சோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது. அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் ஜம்மு - காஷ்மீர் காவல்துறையினர், பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிலிருப்பவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்குச் சொந்தமான இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.