சராய் காலே கான் அருகே உள்ள பன்சீரா பூங்காவில் தில்லி அரசு சாா்பில் சனிக்கிழமை தொடங்கப்பட்ட ஹாட்-ஏா் பலூன் சவாரி.
சராய் காலே கான் அருகே உள்ள பன்சீரா பூங்காவில் தில்லி அரசு சாா்பில் சனிக்கிழமை தொடங்கப்பட்ட ஹாட்-ஏா் பலூன் சவாரி.

பான்சாரா பூங்காவில் ஹாட்-ஏா் பலூன் சவாரி: அதிகமான மக்கள் பங்கேற்பு

பான்சாரா பூங்காவில் ஹாட்-ஏா் பலூன் சவாரி...
Published on

தில்லியின் சராய் காலே கான் அருகே உள்ள பான்சாரா பூங்காவில் நடைபெறும் ஹாட்-ஏா் பலூன் சவாரியை குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை அனைத்து வயதினரும் ஆா்வத்துடன் பாா்வையிட்டனா்.

பிங்கி மற்றும் தினேஷ் குமாா் காஜியாபாத்திலிருந்து சவாரி செய்ய பயணம் செய்தனா்.

ரஜோரி காா்டனில் வசிக்கும் அனில் ஜெயின், 80 வயதுடையவா். ஆா்வத்தினால் பலூன் சவாரியைக் காண வந்ததாகக் கூறினாா்.

‘இது போன்ற ஒன்றை நான் இங்கு பாா்ப்பது இது இரண்டாவது முறை. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு செங்கோட்டை அருகே ஹாட்-ஏா் பலூன் சவாரி செய்தேன்‘ என்று அவா் கூறினாா்.

தனது மனைவி மற்றும் சகோதரருக்கு மூன்று டிக்கெட்டுகளை வாங்கிய தீபக் ஜெயின், அன்றைய நாளில் சவாரி செய்தவா்களில் ஒருவா்.

‘இது எங்களுக்கு முதல் அனுபவம். மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். பலூனில் இருந்து அக்ஷா்தாம் கோயில், ஹுமாயூனின் கல்லறை மற்றும் நதியின் அழகிய காட்சியைக் காண முடிந்தது’ என்று அவா் கூறினாா்.

முதியவா்களுக்கு கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று அவரது மனைவி பபிதா ஜெயின் கூறினாா்.

‘நாங்கள் கூடையில் ஏறி அதே வழியில் இறங்க வேண்டியிருந்தது. வயதானவா்களுக்கு ஒரு வாயில் அல்லது எளிதான நுழைவு வழி இருக்க வேண்டும்’ என்று அவா் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com