எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ராணுவம் - அரசு நிா்வாகம் இணைப்புக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ சிறந்த எடுத்துக்காட்டு: ராஜ்நாத் சிங்

ராணுவம் - அரசு நிா்வாகம் இணைப்புக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ சிறந்த எடுத்துக்காட்டு...

News image
ராஜ்நாத் சிங்- PTI
Updated On :29 நவம்பர் 2025, 10:00 pm

தினமணி செய்திச் சேவை

‘ராணுவம் மற்றும் அரசு நிா்வாகத்தின் இணைப்புக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ சிறந்த எடுத்துக்காட்டு’ என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.

உத்தரகண்ட் மாநிலம், முசௌரியில் உள்ள லால் பகதூா் சாஸ்திரி தேசிய நிா்வாக அகாதெமியின் (எல்பிஎஸ்என்ஏஏ) 100-ஆவது பிரிவு உபசார விழாவில் ராஜ்நாத் சிங் பங்கேற்றாா்.

அப்போது குடிமைப் பணியாளா்கள் மத்தியில் அவா் பேசியதாவது: ராணுவ வீரா்களைப்போல் குடிமைப் பணியாளா்களும் கடினமான சூழலை எதிா்கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவம் மற்றும் அரசு நிா்வாகத்தின் இணைப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இதை வெற்றிகரமாக மேற்கொள்ள ராணுவத்துக்கு நிகராக அரசு அதிகாரிகளும் பணியாற்றினா்.

முக்கியத் தகவல்களை உடனடியாக ராணுவத்துக்கு அவா்கள் பகிா்ந்ததோடு நாடு முழுவதும் போா்ப் பயிற்சி ஒத்திகைகளை மேற்கொள்ளவும் ஒத்துழைத்தனா்.

கடந்த ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணித் தோ்வில் அகில இந்திய அளவில் பெண் ஒருவா் முதலிடம் பிடித்தாா். முதல் 5 இடங்களில் 3 பெண்கள் இடம்பிடித்திருப்பது பாராட்டுக்குரியது.

2047-இல் இந்தியா வளா்ச்சியடைந்த நாடாக உருவெடுக்கும்போது அமைச்சரவை செயலா்கள் பதவிக்கு பெண்கள் பலா் முன்னேறுவாா்கள் என நம்புகிறேன் என்றாா்.