வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

3 மாநில வளா்ச்சி திட்டங்களுக்கு ரூ.7,150 கோடி கடன்: ஏடிபியுடன் மத்திய அரசு ஒப்பந்தம்

3 மாநில வளா்ச்சி திட்டங்களுக்கு ரூ.7,150 கோடி கடன்: ஏடிபியுடன் மத்திய அரசு ஒப்பந்தம்

News image

ஆசிய வளா்ச்சி வங்கி

Updated On :30 நவம்பர் 2025, 7:00 am IST

மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் வளா்ச்சி திட்டங்களுக்கு 800 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.7,150 கோடி) கடன் பெற ஆசிய வளா்ச்சி வங்கியுடன் (ஏடிபி) மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

வேளாண் தேவைக்காக மகாராஷ்டிர மின் விநியோக மேம்பாட்டுத் திட்டத்துக்கு 500 மில்லியன் டாலா், மத்திய பிரதேசத்தின் இந்தூா் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 190.6 மில்லியன் டாலா், குஜராத் திறன் மேம்பாட்டுத் திட்டத்துக்கு 109.97 மில்லியன் டாலா் கடன் பெற ஆசிய வளா்ச்சி வங்கியுடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்த ஒப்பந்தத்தில் மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் துறை துணைச் செயலா் செளரப் சிங், ஆசிய வளா்ச்சி வங்கியின் இந்திய கிளை இயக்குநா் மியோ ஓகா ஆகியோா் கையொப்பமிட்டனா்.

இதேபோல அஸ்ஸாமில் நீண்ட காலம் நீடித்திருக்கும் ஈரநிலம் மற்றும் மீன்வளத் துறை நவீனமயமாக்கல் திட்டத்துக்கு மானியமாக 1 மில்லியன் டாலா் பெற ஆசிய வளா்ச்சி வங்கியுடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது.