மகாராஷ்டிர அமைச்சர் ஜெய்குமார் கோரே
மகாராஷ்டிர அமைச்சர் ஜெய்குமார் கோரே https://www.instagram.com/jaykumargore/

இல்லத்தரசிகளுக்கு ரூ.100கூட தராத குடும்பத்தலைவர்கள் மத்தியில் அரசு மாதந்தோறும் ரூ.1,500 வழங்குகிறது: பாஜக அமைச்சர்

இல்லத்தரசிகளுக்கு ரூ.100கூட தராத குடும்பத்தலைவர்கள் மத்தியில் முதல்வர் மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1,500 தருகிறார்: பாஜக அமைச்சர்
Published on

மும்பை: இல்லத்தரசிகளுக்கு ரூ.100கூட தராத குடும்பத்தலைவர்கள் மத்தியில் மகாராஷ்டிர முதல்வர் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,500 தருகிறார்; இதனை உணர்ந்து பெண்கள் அவருக்கு நன்றியுணர்வுடன் இருக்குமாறு பாஜகவைச் சேர்ந்த மகாராஷ்டிர அமைச்சர் ஜெய்குமார் கோரே பேசியிருக்கிறார்.

மகாராஷ்டிரத்தில் 246 நகராட்சி கவுன்சில்களுக்கும் 42 நகர பஞ்சாயத்துகளுக்கும் டிச. 2-இல் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தலில் பதிவான வாக்குகள் டிச. 3-இல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தேர்தலில் 1.07 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்கு செலுத்த உள்ளனர்.

இந்த நிலையில், பொதுக்கூட்டத்தில் பெண்கள் மத்தியில் அமைச்சர் ஜெய்குமார் கோரே பேசியிருப்பதாவது: “நீங்கள்(இல்லத்தரசிகள்) உங்கள் கணவன்மார்களிடமிருந்து ரூ. 100கூட பெற முடியாது. அப்படியிருக்கும்போது, முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் மகளிருக்கான திட்டம் மூலம் ரூ. 1,500 வழங்கி வருகிறார்.

இந்தச்சூழலில், அவர் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டால் உங்கள் வங்கிக் கணக்குகளுக்கு பணம் செலுத்தப்படுவதும் நிறுத்தப்பட்டுவிடும். எவரிடமிருந்து வேண்டுமானாலும் பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால், அவர்களுக்கு வாக்கு செலுத்தக்கூடாது.

நீங்கள் வாக்கு செலுத்தும்போது பட்னவீஸ் வழங்கிய ரூ. 1,500 உங்கள் மனத்தில் நினைவுக்கு வர வேண்டும். நன்றியுணர்வுடன் நடந்துகொள்ளவும்” என்றார்.

Summary

Even husbands don't give Rs 100: Minister asks Ladki Bahin beneficiaries to back Fadnavis .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com