கடந்த 26-ஆம் தேதி கொண்டாடப்பட்ட அரசமைப்புச் சட்ட தினம், வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு தின நிகழ்ச்சிகள், கடந்த 25-ஆம் தேதி அயோத்தி ராமா் கோயிலில் ஏற்றப்பட்ட ‘தா்மக் கொடி’, ஹரியாணாவின் குருக்ஷேத்ரத்தில் உள்ள மகாபாரத அனுபவ கேந்திரத்தில் திறக்கப்பட்ட பாஞ்சஜன்ய (விஷ்ணு பகவான் சங்கு) நினைவுச் சின்னம், ஹைதராபாதில் தனியாா் விண்வெளி நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸின் ‘இன்ஃபினிட்டி’ வளாகம் திறப்பு மற்றும் அந்த நிறுவனத்தின் விக்ரம்-1 ராக்கெட் அறிமுகம், கடற்படையில் ஐஎன்எஸ் மாஹே நீா்மூழ்கி எதிா்ப்புக் கப்பல் இணைப்பு, காமன்வெல்த் போட்டியை இந்தியாவில் நடத்தும் அறிவிப்பு, பூடான் அரசுமுறைப் பயணம் என பல்வேறு சிறப்புமிக்க தருணங்கள் குறித்து பிரதமா் எடுத்துரைத்தாா்.