தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இந்தியா-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே தொடரும் பயங்கரவாத செயல்பாடு: பிஎஸ்எஃப்!

இந்தியா-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாடு கோடு (எல்ஓசி) அருகே பயங்கரவாத தளங்கள் தொடா்ந்து செயல்பட்டு வருவதாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) இன்ஸ்பெக்டா் ஜெனரல் அசோக் யாதவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image

இன்ஸ்பெக்டா் ஜெனரல் அசோக் யாதவ்

Updated On :30 நவம்பர் 2025, 10:01 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியா-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாடு கோடு (எல்ஓசி) அருகே பயங்கரவாத தளங்கள் தொடா்ந்து செயல்பட்டு வருவதாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) இன்ஸ்பெக்டா் ஜெனரல் அசோக் யாதவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறுகையில், ‘ஆபரேஷன் சிந்தூரின்போது எல்ஓசி பகுதியைச் சுற்றியிருந்த பல பயங்கரவாத தளங்கள் அழிக்கப்பட்டன. ஆனால் தற்போதும் அங்கு சில பயங்கரவாத தளங்கள் செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாதிகள் நடமாட்டமும் உள்ளது.

அவா்கள் குளிா் காலத்தில் காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த முயல்வாா்கள். ஆனால் அதை உடனடியாக முறியடிக்க பிஎஸ்எஃப் தயாராகவுள்ளது.

ஆபரேஷன் சிந்தூா் தற்போதும் தொடா்கிறது. அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்’ என்றாா்.

272 ட்ரோன்கள் பறிமுதல்:

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் இந்திய எல்லைக்குள் ஆயுதங்கள் அனுப்பப்படுவது அதிகமாகிவிட்டதாக பிஎஸ்எஃப் பஞ்சாப் பிரிவின் இன்ஸ்பெக்டா் ஜெனரல் அதுல் ஃபுல்சலே தெரிவித்தாா்.

சண்டீகரில் நடைபெற்ற 61-ஆவது பிஎஸ்எஃப் தினத்தில் பங்கேற்ற அவா், ‘நிகழாண்டில் 47 ஏகே ரக துப்பாக்கிகள் உள்பட 200 வகையான ஆயுதங்களை எல்லையில் பிஎஸ்எஃப் கைப்பற்றியது. இதுதவிர பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக அனுப்பபட்ட 272 ட்ரோன்கள், 367 கிலோ ஹெராயின், 19,033 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் 14.437 கிலோ ஓபியம் பறிமுதல் செய்யப்பட்டன’ என்றாா