
மகாத்மா காந்தியின் பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் காந்தியின் பிறந்தநாளான இன்று ’காந்தி ஜெயந்தி’ விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், காந்தி ஜெயந்தி குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”காந்தி ஜெயந்தி என்பது, மனித வரலாற்றின் போக்கை மாற்றியவரின் அசாதாரண வாழ்க்கைக்கு மரியாதை செலுத்துவதாகும். தைரியமும் எளிமையும் பெரும் மாற்றத்திற்கு கருவிகளாக மாற முடியும் என்பதை அவர் காட்டினார்.
சேவையும் இரக்கமும் மக்களை மேம்படுத்துவதற்கு அத்தியாவசியமான வழிகளாக உள்ளன என்று அவர் நம்பினார். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் எங்கள் பயணத்தில் அவரது பாதையை தொடர்ந்து பின்பற்றுவோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.